கொரோனாவை ஒழிக்க சிவகுமார் யோசனை
“மூச்சு விடுவதில் சிரமம் மட்டும்தான் முன்பு கொரோனா அறிகுறியாக இருந்தது. இப்போது வயிற்றுப்போக்கு, வாந்தி. தலைவலி சேர்ந்து இருக்கிறது. இதில் எந்த அறிகுறி தெரிந்தாலும் உடனே டாக்டரை பார்த்து விடுங்கள்.வீட்டில் வைத்தியம் பார்ப்பதாக இருந்தால் தனியாக ஒரு அறையில் தங்க வைத்து விடுங்கள். சாப்பாடு பிளேட், டாய்லட் தனியாக இருக்க வேண்டும்.
குழந்தைகளை வெளியே விளையாட விடாதீர்கள்.ஒரு வருடமாக டாக்டர்கள் நர்சுகள் குடும்பம் குழந்தை குட்டிகளை மறந்து ராத்திரி பகலாக நம்மை காப்பாற்ற வைத்தியம் பார்த்து நூற்றுக்கணக்கானோர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.
ஆஸ்பத்திரியில் 500 படுக்கை உள்ளது. 5 ஆயிரம் நோயாளிகள் ஒரேசமயத்தில் சென்று கவனிக்கவில்லை என்று தாறுமாறாக திட்டுவது நியாயமா? யோசியுங்கள். அநாவசியமாக வெளியே சுற்றாதீர்கள். போய்தான் ஆகவேண்டும் என்றால் மூக்கு வாயை முககவசம் மூலம் மூடிக்கொள்ளுங்கள். 10 அடி தூரத்தில் நின்று பேசுங்கள். கையை அடிக்கடி கழுவுங்கள்.
முன்னாடியே ஊசி போட்டுக்கொண்டால் கொரோனா நம்மை கடுமையாக தாக்காது. உயிருக்கு ஆபத்தும் குறைவு. முழுமையான ஊரடங்கும், ஊசி போடுவதும்தான் கொரோனாவில் இருந்து நம்மை காப்பாற்றும். எல்லோரும் விழிப்புடன் இருந்து கொரோனாவை ஒழிப்போம்''.
இவ்வாறு பேசி உள்ளார்.
Post a Comment