புயல் பாதிப்புக்கு மத்தியில் புகைப்படங்கள் எடுத்த நடிகை; சமூகதளவாசிகள் கடும் கண்டனம்!
அரபிக்கடலில் உருவான ‘டவ்தே’ புயல் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு குஜராத்தில் கரையை கடந்தது.
இந்த புயல் காரணமாக மராட்டியத்தில் மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடுமையான சேதங்களை சந்தித்தன. அந்த மாவட்டங்களில் 12 பேரின் உயிரை இந்த புயல் பறித்தது.
மேலும் இந்த புயல் குஜராத், கர்நாடகத்திலும் பெரும்சேதத்தை ஏற்படுத்தி பலரின் உயிரையும் பறித்தது.
புயல் காரணமாக நாட்டின் நிதி தலைநகர் மும்பையில் சூறைக்காற்றுடன் மழை கொட்டித்தீர்த்தது. அப்போது காற்றின் வேகம் 114 கி.மீ. ஆக இருந்தது. மேலும் 23 செ.மீ. மழை பெய்தது. குறிப்பாக மும்பை கடலின் சீற்றம் கடுமையாக இருந்தது. கடல் கொந்தளித்ததால், ராட்சத அலைகள் பல அடி உயரம் எழுந்தன. பனை உயரம் எழுந்து தாக்கிய அலையால் மும்பையின் சுற்றுலா தலமான கேட் வே ஆப் இந்தியா சேதம் அடைந்தது.
‘டவ்தே’ புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு இடையே நடனமாடியும், புகைப்படங்கள் எடுத்தும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய நடிகை தீபிகா சிங்கிற்கு சமூகதளவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
புயலை நாம் தடுத்த நிறுத்த முடியாது. அதுவாகவே கடந்து போகும் என்றும் நடிகை தீபிகா சிங் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment