கருப்பு பூஞ்சை நோயை தேவை ஏற்பட்டால் தொற்று நோயாக அறிவிப்போம்: கெஜ்ரிவால்
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்களுக்கு அதிக அளவாக கருப்பு பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனையடுத்து, ராஜஸ்தான், தெலங்கானா போன்ற மாநிலங்கள் இதனை தொற்று நோயாக அறிவித்துள்ளன.
கருப்பு பூஞ்சை நோயை தமிழக அரசும் தொற்று நோயாக அறிவித்துள்ளது. இதேபோன்று ஒடிசா அரசு, கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோய்கள் சட்டம் 1897ன் கீழ் அறிவிக்கப்பட்ட ஒரு தொற்று நோயாக சேர்த்து உள்ளது.
இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் கூறும்பொழுது, தேவை ஏற்பட்டால் கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அரசு அறிவிக்கும். அனைத்து மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களிடமும் ஸ்டீராய்டுகளை கட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயன்படுத்த வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
நோயாளிகள் அவர்களுடைய சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஸ்டீராய்டுகள் மற்றும் (ரத்த) சர்க்கரை கலவையால் கருப்பு பூஞ்சை ஏற்படுகிறது என கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.
நாட்டின் தலைநகர் டெல்லியில், கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்துவதற்காக 3 மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் சிகிச்சை அளிக்க இருக்கின்றனர்.
Post a Comment