திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கைது வழக்கில் விசாரணை தள்ளிவைப்பு
நரதா வீடியோ டேப் லஞ்ச வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் மந்திரிகள் பிர்காத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி, எம்.எல்.ஏ. மதன் மித்ரா, அக்கட்சியில் இருந்து விலகி விட்ட முன்னாள் மேயர் சோவன் சட்டர்ஜி ஆகியோரை கடந்த திங்கட்கிழமை சி.பி.ஐ. கைது செய்தது. அவர்களுக்கு சி.பி.ஐ. கோர்ட்டு ஜாமீன் அளித்தது.
ஆனால், சி.பி.ஐ.யின் மேல்முறையீட்டின் பேரில், ஜாமீன் உத்தரவுக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. அதனால் 4 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
4 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றக்கோரி சி.பி.ஐ. ஒரு மனு தாக்கல் செய்திருந்தது. கொல்கத்தா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ் பிண்டால் தலைமையிலான அமர்வு நேற்று முன்தினம் இதை விசாரிப்பதாக இருந்தது. ஆனால், விசாரணையை ஒருநாள் தள்ளி வைத்தது. இருப்பினும், தவிர்க்க இயலாத காரணங்களால், நேற்று அந்த அமர்வு கூடவில்லை. இதனால் விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.
Post a Comment